சிறிலங்காவுக்கு சென்றிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு சென்றதுடன் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்து அமர்வுகளையும் சிறிது நேரம் அவதானித்தனர். |
அச்சமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் சிறிலங்காப் படையின் துணைப் படைக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் நேற்று சார்க் மாநாட்டுக்கான நிதி செலவீடு தொடர்பிலான பிரேரணை நடைபெற்றது. இதன் போது, சிவாஜிலிங்கம் மிகவும் காரசாரமாக சிறிலங்கா அரசின் செயற்பாடுகளைக் கண்டித்து உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, நாடாளுமன்ற பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் மிகவும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தனர். அச்சமயம், சபையில் அமைச்சர்கள் பெருமளவிலானோர் இருக்கவில்லை. இந்நிலையில் திடீரென வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிவாஜிலிங்கத்துடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். சிவாஜிலிங்கத்தை பேசவிடாது தொடர்ந்தும் அமைச்சர் டக்ளஸ் குறுக்கீடு செய்துகொண்டே இருந்தார். "நீங்கள் புலிகள், உங்கள் தலைவர் பிரபாகரன். இடம் மாறி வந்து உரையாற்றுகின்றீர்கள், உங்களை புலிகள்தானே இங்கே அனுப்பி வைத்தார்கள்" என குறுக்கீடு செய்துகொண்டே இருந்தார். இருவருக்கும் இடையிலான இந்த தர்க்கத்தையும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அமைச்சர்கள் புன்முறுவலுடன் அமர்ந்திருந்தனர். இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பலர் சபையை பல கோணங்களிலும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். சிவாஜிலிங்கத்தின் பின்னர் உரையாற்றிய அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவை சபைக்கு அறிமுகம் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மேசையில் தட்டி வரவேற்றனர். அவர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு பார்வையாளர் பகுதியில் இருக்கும் வரை சபாநாயகர் இருக்கையில் மதகுருவான உடவத்த நந்ததேரரே அமர்ந்திருந்தார். ஆதாரம்: தினக்குரல் |
Wednesday, 23 July 2008
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பார்வையாளர் பகுதியில் இருந்தவேளை சபையில் சிவாஜிலிங்கம்-டக்ளஸ் வாய்ச்சண்டை
Subscribe to:
Post Comments (Atom)

சிறிலங்காவுக்கு சென்றிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு சென்றதுடன் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்து அமர்வுகளையும் சிறிது நேரம் அவதானித்தனர்.
No comments:
Post a Comment