Thursday, 24 July 2008

பொறியியல் உயர்தேசிய டிப்ளோமா பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கொழும்பு இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பொறியியலில் உயர் தேசிய டிப்ளோமா பயிற்சி நெறிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

விண்ணப்பதாரிகள் 2007 அல்லது அதற்கு முன்னர் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது இணைந்த கணிதம், பௌதீகவியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களில் ஒரே அமர்வில் மூன்று சித்திகளைப் பெற்றிருப்பதுடன் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் ஆங்கில மொழித் திறமைச் சித்தியினையும் பெற்றிருத்தல் வேண்டும்.

இப்பாடநெறி மூன்று ஆண்டு கால பயிற்சிநெறியினையும் ஆறு மாதகாலத்தினைக் கொண்ட பொறித்தொகுதி பயிற்சியினையும் உள்ளடக்கிய ஆங்கில மொழி மூலமான முழு நேரத்திற்குரியதாகும்.

தகுதியான விண்ணப்பதாரிகள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 01.08.2008 இற்கு முன்னர் பணிப்பாளர் உயர் தொழில்நுட்ப நிறுவனம் , 42 ரொட்றிக்கோ பிளேஸ், கொழும்பு15 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments: