Wednesday, 16 July 2008

திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் கைது

திருகோணமலை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் கிருபராஜா விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுப்பதற்காக வர்த்தகர்களை இவரே விடுதலைப்புலிகளிடம் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டதாகவும் கைதுசெய்யப்படும் போது நபர் ஒருவரை கடத்திச் சென்றுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் கிருபராஜாவிற்கு அரசாங்கத்தினால் 4 காவல்துறையினர் பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

No comments: