போராட்ட காலத்தில் பிற்போக்குத்தனங்களை தமிழினம் களைவது இன்றியமையாதது என்று , தமிழீழ அரசியல் பொறுப்பாளர் கூறியுள்ளார். நேற்றுப் புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற, ”உடையாத விலங்குகள்” நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றிய, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தொன்மையான குடிகளாக தமிழினம்
திகழ்கின்ற அதேவேளை, தமிழ் மக்களிடையே பல்வேறு வகையிலான பிற்போக்குத்தனங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதியுள்ள நூல், இவற்றை தெளிவாக உணர்த்தி நிற்கும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் போராட்டம் இடம்பெறும் இக்காலகட்டத்தில் பிற்போக்குத்தனங்களை தமிழினம் களைய வேண்டும் என்றும் பா.நடேசன் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment