Sunday, 13 July 2008

மல்லாவி மாந்தை கிழக்குப் பகுதிகளில் தொடரும் எறிகணை தாக்குதல்களால் மக்கள் பாதுகாப்பு தேடி வெளியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மாந்தை கிழக்குப் பகுதிகளில் தொடரும் எறிகணை தாக்குதல்கள் மக்கள் பாதுகாப்பு தேடி வெளியேற்றம் விமானத்தாக்குதலில் மாணவி காயம்.

விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மற்றும் மாந்தை கிழக்குப் பகுதிகளில் தொடர்ச்சியாக எறிகணை குண்டுகள் வந்து விழுவதனால், அப்பகுதிகளில் இருந்து பெருமளவிலான மக்கள் கடந்த இரு தினங்களாக பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்து வருவதாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் நேற்றுக்காலை இடம்பெற்ற விமானத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் முருகேசு இந்திரவதனா என்ற 20 வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் இந்தப் பிரதேசத்தை நோக்கி தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணை தாக்குதல்களில்,

மாந்தை கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பணிமனைக் கட்டிடம், பாண்டியன்குளம் மகாவித்தியாலயம், தொண்டு நிறுவனம் ஒன்றின் பொதுக்கட்டிடம் என்பன சேதமடைந்துள்ளதாகவும், வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளதாகவும் வி;டுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த எறிகணை தாக்குதல்களில் பெருமளவு கால்நடைகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

No comments: