Sunday, 13 July 2008

கிழக்கில் விடுதலைப் புலிகள் - பின்தொடர்கிறதாம் பிள்ளையான் குழு

கிழக்கில் தற்போது செயற்பட்டுவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை கண்டறியும் விசேட நடவடிக்கையொன்றை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பித்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டு குழுக்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தமது தேடுதல் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கட்சியின் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.


வன்னியிலிருந்து கிழக்கிற்கு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழு மற்றும் கிழக்கு புலிகளின் தலைவர்கள் ஆகியோரை கண்டு பிடிக்கும் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிவில் மக்கள் மத்தியில் சஞ்சரித்து கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பிள்ளையான் குழு குற்றம் சாட்டுகின்றது.


கரையோரப் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பாதுகாப்புத் தரப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழு அண்மையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தைலேஸ்வரராஜா குறிப்பிட்டுள்ளார்.

No comments: