Sunday, 13 July 2008

அதிஷ்டான பூஜையின் பேரில் சமாதான நடவடிக்கைகள் பயன் தருமா???

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமையினால்

அதிஷ்டான பூஜை என்ற போர்வையில் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

சில பௌத்த பிக்குகளின் ஊடாக இந்த சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்தத் தகவல்கள் சுட்டிக் காட்டி உள்ளன.

இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்த்து நாடு இன்று எதிர்நோக்கியுள்ள சமூக பொருளாதார கலாசார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்து சமயத் தலைவர்களும் இணைந்து செயல்படக்கூடிய வகையில் ஜாதிகதி`டான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க உடுவே தம்மாலோக தேரர் உட்பட பிரபல பௌத்த தேரர்கள் பலர் ஒன்றிணைந்துள்ளனர்.

ஜாதிகதி`டான செயற்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல முன்னணிகளின் தேரர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உடுவே தம்மாலோக தேரர் கருத்துத் தெரிவிக்கையில் இன்று மனிதாபிமானம் மனிதநேயம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது.

ஒரு இனம் மற்றொரு இனத்தை விரோத மனப்பான்மையுடனேயே நோக்குகின்றது. இது பெரும் சாபக்கேடாகும்.

இந்நிலை தொடர்ந்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியாது.

மனித உடம்புக்குள் தீய சக்திகள் உட்புகுந்துள்ளன. அவைகளை வெளியேற்றி தூய்மை படுத்த வேண்டிய கடமை மதத் தலைவர்களுக்கு உண்டு. அதை நிறைவேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது எனக் கூறினார்.

மாதலுவாயே சோபித தேரர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- நாட்டின் அரசியல் போக்கை முற்றாக மாற்ற வேண்டும். ஜனநாயக நாட்டுக்கு தேர்தல் தேவை. ஆனால் இன்று தேர்தல் என்றதும் சகோதரர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறி யுத்தம் செய்கின்றனர்.

இந்தத் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்காக அமைச்சர் தினே` குணவர்தன தலைமையில் குழுவென்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

பொய் களவு லஞ்ச ஊழல் சுரண்டல் இல்லாத அரச சேவையொன்றை ஏற்படுத்த வேண்டும். இந்த உன்னத இலக்கை அடையவும் இந்த சர்வ மதக்குழு பரிந்துரைக்கும் எனக் கூறினார்.

இந்த நாடு இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது என்று இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்து முஸ்லிம் கிறிஸ்தவ சமயத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட இந்த பௌத்த குருமார் தீர்தானித்துள்ளனர்

No comments: