Thursday, 10 July 2008

இந்தியாவுக்கு மகிந்த இன்றிரவு திடீர் பயணம்


சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று வியாழக்கிழமை இரவு இந்தியாவுக்கு அவசர பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதாக அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுடில்லிக்கு இன்றிரவு செல்லும் மகிந்த, நாளை முற்பகல் 10:00 மணிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

சார்க் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காகவே மகிந்த இந்தியா செல்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த பேச்சு குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. மகிந்தவுடன் செல்லவுள்ளவர்களின் விபரங்களும் வெளியிடப்படவில்லை.

நாளை முற்பகல் இந்தியப் பிரதமருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு நாளை இரவே அவர் மீண்டும் கொழும்பு திரும்பவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இந்திய உயர்மட்டக்குழுவினர் கொழும்பிற்கு முன்னறிவிக்கப்படாத பயணத்தினை மேற்கொண்டு இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

அதன் ஒரு கட்டமாகவே மகிந்தவும் இந்தியாவுக்கு அவசர பயணத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: