Thursday, 10 July 2008

இன்று இலங்கையில் ந்டைபெற்ற தொழில் சங்க போராட்டத்திற்கெதிரான வன்முறைகளின் தொகுப்பு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளரும், நுவரெலியா காமினி தேசிய பாடசாலையின் ஆசிரியருமான ஜகத் தர்மசிறி ஹெட்டியாராச்சி, அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவின் அடியாட்களினால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரின் வீட்டிக்கு நேற்றிரவு சென்ற இந்த அடியாட்கள் ‘நீ நாளைக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போகிறாயா’ என கூறியாறு தாக்கியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் ஹெட்டியாராச்சியின் கையடக்க தொலைபேசியையும் அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவின் செயலாளர் திசாநாயக்க, மற்றும் அவரது சாரதி நுவான் ஆகியோர் தலைமையிலான அடியாட்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

லேக் ஹவுஸ் போராட்டத்திற்கு முட்டைத் தாக்குதல்

இன்று நடைபெற்ற பணிப்பகிஷ்கரிப் போராட்டத்திற்கு சமாந்திரமாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் லேக் ஹவுஸ் கிளை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு அழுகிய முட்டைகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மதிய போசன இடைவேளையின் போது இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்திற்கு நிர்வாகம் தடை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் தொழிற்சங்கமான சுதந்திர ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் இந்தத் தாக்குதலை மேற்கெண்டதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.

தடைகளுக்கு மத்தியிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், குறித்த போராட்டம் குறித்து எழுத்து மூலமாக நிர்வாகத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாகவும் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓர் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என நிர்வாகம் ஒருபோதும் அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

லேக் ஹவுஸ் நிறுவனக் கிளையினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகண ஓட்டுணர்கள் சங்கப் பொருளாளர் கத்துக்குத்துக்கு இலக்காகி உள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயம் அடைந்த இந்த தொழிற்சங்கவாதி கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெறுகின்ற நாடுதழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தை அடுத்து பல பகுதிகளிலும் இனம்தெரியாதவர்கள் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: