Saturday, 19 July 2008

பொலநறுவையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு

பொலநறுவையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டி மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முச் சக்கர வண்டியில் இருந்த ஒருவர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்துள்ளார். இருவர் பலத்த காயங்களுடன் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளியன்று இரவு இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இருவர் முச்சக்கர வண்டியை மறித்து அதிலிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் பொலநறுவை ஜயந்திபுரவை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயமடைந்த இருவரும் பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பொலநறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: