Tuesday, 15 July 2008

அடுத்த இலக்கு நாடாளுமன்றத்திற்கு செல்வது – ஒட்டுக்குழுத்தலைவன் கருணா

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ???என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிகாரிகளை சந்தித்த போதே கருணா இதனை குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையமான தேனகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இந்த கருத்தினை கூறியுள்ளார்.

தனது அடுத்த இலக்கு நாடாளுமன்றத்திற்கு செல்வது என தெரிவித்துள்ள கருணா தான் தொடர்ந்தும் மட்ட்க்களப்பில் இருக்க போவதாக கூறியுள்ளார்.

அரசாங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ரி.எம்.வி.பியின் பிரதி தலைவருமான பிள்ளையான் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

ttpian said...

karuna will plug the hair of mahindha brothers if karuna go to parliment