Tuesday, 15 July 2008

கிழக்கில் அடிப்படைவாத சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் ஹெல உறுமய

jhu-globaltamilnewscom.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்றீடாக கிழக்கில் வேறு அடிப்படைவாத சக்திகள் தலைத்தூக்க இடமளிக்காது, அவ்வாறாது தலைத்தூக்கி வரும் சக்திகளை வேரூடன் அறுத்தெறிந்து, தமிழ் சிங்கள மக்களின் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும்

என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கல்முனையில் மூன்று சிங்களவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் அமைதியாக வாழ படையினர் கிழக்கை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றினர்.


இதனடிப்படையில் தற்போது கிழக்கில் ஜனநாயக சூழல் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிழக்கின் அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய பிரதேசங்களில் இருந்து வேறுவகையான அடிப்படைவாதம் தலைத்தூக்கி வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ஓமல்பே சோபித குறிப்பிட்டுள்ளார்.


குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் இருந்து கல்முனைக்கு சென்ற 3 சிங்கள இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டமை இதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னரும் மொறட்டுவ, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களுக்குச் சென்ற சிங்களவர்கள் பலர் இவ்வாறான அடிப்படைவாத ஆயுதக்குழுக்களிளால் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்த கொலைகளில் ஈடுபடுவர்கள் யார் என்பதை கண்டறிய அரசாங்கம் முக்கிய புலனாய்வுஅதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவொன்றை உடனடியாக பணியில் அமர்த்தி குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.


பெருபான்மையாக சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் தமிழ் மற்றும் முஸ்லீம் இனத்தவர்கள் சுதந்திரமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது.எனினும் சிங்களவர்களுக்கு அந்த ஜனநாயக உரிமை இல்லை என்பது இந்த கொலைகள் மூலம் எதிர்வுகூறப்பட்டுள்ளன.


கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் ஜிகாத், ஓசாமா ஆகிய குழுக்கள் செயற்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறான குழுக்கள் சிங்களவர்களின் கொலைகளின் பின்னனியில் இருக்குமானால்,

அண்மைக் காலத்தில் முஸ்லீம் அடிப்படைவாதத்தை ஆதரித்த ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அடிப்படைவாத்தை ஆதரித்தவர்கள் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் .

ஆட்கடத்தில், காணாமல் போதல் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு உலகம் முழுவதும் சுற்றிவரும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் போலியான மனித உரிமை அமைப்புகளும்

இந்த சிங்களவர்களின் கொலைகள் குறித்து என்ன கூறுகின்றனர் என தாம் கேள்வி எழுப்புவதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: