Friday, 18 July 2008

இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜே.வி.பி

இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதிகளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சிரம் தாழ்த்தி நிறைவேற்றி வருவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாகவே மன்னார் எண்ணெய் அகழ்வுப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பிள்ளையானுக்கும், பிரபாகரனுக்கும் வழங்குவதே இந்தியாவின் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை நிறுத்தி அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்க மஹிந்த அரசாங்கம் இந்தியாவிற்கு ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: