Friday, 18 July 2008

சார்க் நாடுகளிடையே புலனாய்வுத் தகவல்களைப் பரிமாற்றுவது முக்கியமானது – பாலிதஹேகன

பங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்வதன் முக்கியத்தும் குறித்து இலங்கை எதிர்வரும் சார்க் மாநாட்டின் போது வலியுறுத்தும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹேன தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத்தை ஒழிப்பது தொடர்பில் சார்க் நாடுகளுக்கிடையில் தற்போதைய ஒத்துழைப்புகளை விடவும் அதிகமான ஒத்துழைப்புகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனை தவிர அதிகரித்து வரும் எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க பிராந்திய ரீதியில் மாற்று எரிபொருளின் பயன்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பிலும் சார்க் பிரதிநிதிகள் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளனர்.


அது மாத்திரமல்லாது, புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றங்கள், உலக உணவு பிரச்சினையில் பிராந்திய நாடுகளின் தீர்வுயோசனைகள் குறித்து சார்க் நாடுகளின் தலைவர்கள் கொழும்பில் கலந்துரையாட உள்ளனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் அபிவிருத்தி என்ற தொனிப் பொருளில் இந்த முறை சார்க் மாநாடு நடைபெறவுள்ளது, சாhக் மாநாட்டின் நிகழ்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

No comments: