Sunday, 6 July 2008

காட்டு யானை தாக்கி இராணுவ வீரர் பலி

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரு இராணுவ வீரர்களில் ஒருவரை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இராணுவ பதுங்கு குழியில் இருந்து கடமைபுரிந்த இவ்விரு இராணுவ வீரர்களில் ஒருவர் பதுங்கு குழியைவிட்டு வெளியே வந்து நின்றபோது அங்கு வந்த காட்டு யானை அவரைப் பிடித்து தாக்கியுள்ளது.

இதனை பதுங்கு குழியில் இருந்து கண்ட மற்ற இராணுவ வீரர் உடனடியாக அந்த யானையை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

கங்குரங்கெத்த பகுதியைச் சேர்ந்த ரி.எம்.கருணதாஸ என்ற இராணுவ வீரரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார்.

இப்பகுதியில் காட்டு யானைகள் அண்மைக்காலங்களில் உணவு தேடி கிராமப்புறங்களுக்கு வருவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

No comments: