Sunday, 6 July 2008

திருமலையில் மூவரைக் காணவில்லை ஆட்டோவில் வந்து சிறுவன் கடத்தல்

திருகோணமலை ஹோமரங்கடவெல பகுதியில் மூன்று தமிழர்கள் காணாமல் போயுள்ள அதேநேரம், திருமலை உப்புவெளிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவனொருவன் கடத்தப்பட்டுள்ளான்.

ஹோமரங்கடவெல காட்டுப் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை விறகு சேகரிப்பதற்காக நான்கு தமிழர்கள் சென்றுள்ளனர். இவர்களில் கணவன் மனைவியும் அடங்குவர்.

இந்த நால்வரில் கணவன் மனைவி உட்பட மூவர் பின்னர் காணாமல்போன நிலையில் ஒருவர் மட்டும் வீடு திரும்பியுள்ளார்.

ஏனைய மூவருக்கும் என்ன நடந்ததெனத் தெரியவில்லை. இது குறித்து மேற்படி மூவரதும் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, நேற்றுக் காலை உப்புவெளி காந்திநகர் பகுதியில் வீடொன்றிலிருந்து 15 வயதுச் சிறுவனொருவன் கடத்திச் செல்லப்பட்டுள்ளான்.

இவனது தாயும், தந்தையும் வீட்டிலில்லாத போது ஆட்டோ ஒன்றில் அங்கு வந்தவர்கள் இந்தச் சிறுவனைக் கடத்திச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான காரணம் குறித்து எதுவும் தெரியவரவில்லை. இது குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: