யுத்த முன்னெடுப்புக்களுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட்டு , காங்கிரஸ்
கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஓராண்டுக்கு தக்க வைக்கப்பட்ள்ளது.
இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைத்திருக்கும், சிறீலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வா, நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றியீட்டியுள்ளமை, வடக்கில் தமது படைகள் முன்னெடுக்கும் படை நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே, தென்னிலங்கை மாவட்டங்களில் தொடருந்து அபிவிருத்திப் பணிகளை, சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுப்பதற்கு கடனுதவி வழங்குவதற்கு, இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான உடன்படிக்கை, இன்று சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் மத்தியில் கைச்சாத்தாகியுள்ளது. இதன்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட படைத்துறை - பொருளாதார நிதியுதவிகளுக்கு மேலதிகமாக, சிறீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் பத்துக் கோடி டொலர் கடனுதவியை இந்தியா வழங்குகின்றது.

No comments:
Post a Comment