Wednesday, 23 July 2008

உதலாகம ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

காணாமல் போதல்கள், கடத்தல்கள் மற்றும் கொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உதலாகம ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் 12ம் திகதியின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் நிஷ்ஷங்க உதலாகம தெரிவித்துள்ளார்.

மீண்டும் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும், இதுவரையில் விசாரணைகளின் மூலம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: