கிளிநொச்சியை படையினர் கைப்பற்றப்போவதாக அரசாங்கம் தெரிவிப்பது, தாம் மேற்கொள்ளும் அனைத்து ஊழல்களையும் மறைப்பதற்காகவே என ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
போரைக்காரணம் காட்டி அரசாங்கம் நாட்டின் அனைத்து விடயங்களையும் மறைத்து வருவதாக கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்தரப்பினர் பதில் அளிக்கும் போது, போரையே காரணம் காட்டுகின்றனர்.
2002 ஆம் ஆண்டில் செய்துக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டு காலப்பகுதியில்,எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் கொல்லப்படவில்லை.
எனினும், 2005 ஆம் ஆண்டில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையை நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment