‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை வருகைத்தரும் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படை மூன்று கப்பல்களை இலங்கையில் கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முன்னரங்க, பாதுகாப்பு ஏவுகனை அழிப்பு கப்பல்களும் இதில் அடங்குகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வான்படை, கடற்படை மற்றும் கடலுக்கடியிலான தாக்குதல் பிரிவு என்பன இருப்பதால்
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இந்த பாதுகாப்பு தரப்பு செய்திநிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் நேரடியாக கவனி;ப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நிலைக் கொள்ளவுள்ள 6900 தொன் நிறையைக்கொண்ட,360 கடற்படை வீரர்களை கொண்ட இந்தியாவின் டெல்ஹி;;-கிளாஸ் தாக்குதல் கப்பல், அணுவாயுத தாக்குதல் திறனைக்கொண்டது.
இதனை தவிர ராஜ்புட் தாக்குதல் கப்பல் மற்றும் சீ கிங், செட்டாக் ஆகிய கப்பல்களே இலங்கையின் கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன.
அத்துடன் கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பின் கோட்டை பகுதிகளின் வான் பரப்பில் கண்காணிப்புகளை மேற்கொள்ள இந்தியாவின் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.
கூடவே ‘சார்க்’ மாநாட்டில் பங்கேற்கும் இந்தியாவின் பிரதிநிதிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட குண்டுத்துளைக்காத வாகனங்களும் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment