Thursday, 17 July 2008

தென்னிலங்கை தாக்குதல் நிறுத்தப்படுவது புலிகளுக்கு அனுகூலம். பிரிட்டன் தடையை நீக்க வாய்ப்பளிக்கும்.

தென்னிலங்கையில் இடம் பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவது விடுதலைப்புலிகளுக்கு அனுகூலமாக அமையுமெனவும் புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்குவதற்கும் வாய்ப்பாக அமையுமென்ற கருத்தை வருகை தந்துள்ள பிரிட்டன் வெளியுறவு உதவியமைச்சர் மல்லே பிரவுண் பிரபு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் த.தே.கூட்டமைப்பு பா.உ தலைவர் சம்ந்தனுடனான சந்திப்பின் போதே மல்லோ பிறவுன் பிரபு இக்கருத்தை தெரிவித்தார் என தெரியவருகிறது.

மல்லோ பிரவுண் பிரபுவை நேற்று முன்தினம் கொழும்பில் பிரிட்டிஷ் தூதரகத்தில் சம்பந்தன் சந்தித்து உரையாடினார். 40 நிமிடங்கள் வரை நீடித்த சந்திப்பின் போது சம்பந்தன் பிரிட்டிஷ் அமைச்சரிடம் கூறியதாவது :

'இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு ஒன்றைக்காணும் விதத்தில் அரசின் நடவடிக்கைகள் அமையவில்லை. அரசின் தற்போதைய நடவடிக்ககைள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

பல்லின பல்கலாசார, பல்சமய மக்கள் வாழுகின்ற நாடு என்பதை ஏற்றுக் கொண்டு அரசியல் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கும எண்ணத்துடன் இலங்கை அரசு செயல்படவில்லை. பெரும்பான்மை இனத்தின் நாடு இலங்கை என்ற நிலைப்பாட்டில் மீதான் அரசு செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால், அரசியல் தீர்வு ஒன்றைக் காணக்கூடிய வாய்ப்பு அரிதாகவே தென்படுகின்றது

இராணுவ நடவடிக்கையிலேயே அரசு இன்று முழுமையாக ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்ததைக்கு செல்லாமல் இராணுவ ரீதியில் விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற முழு முயற்சியில் தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனை எவரும் மறுக்கமுடியாது.

சர்வகட்சி மாநாடு மூலம் ஒன்றுமே அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அர்த்தமுள்ள அரசியல் தீர்வு ஒன்றை அடையும் முயற்சியில் சர்வகட்சி மாநாடு தோல்வி கண்டுள்ளது.

மனித உரிமை மீறல் தொடர்கதையாக மாறியுள்ளது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து இத் திகதிவரை 90 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என்று முறைப்பாடுகள் வெளியாகியுள்ளன. அரசின் போர் நடவடிக்கை தீவிரமடைந்து வருவதால் வன்னிப் பிரந்தியத்திலிருந்து ஆயிரக்கணக்கில் தமிழ்க் குடிமக்கள் இடம் பெயர்ந்து நிர்க்கதி நிலைக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் அரசு ஒருவிதமான நடவடிக்கையும் எடுக்காது இருக்கிறது.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். முன்வைக்கப்படும் தீர்வு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும். அவ்வாறில்லாத ஒரு அரசியல் தீர்வை, அர்த்தமற்றதான அரசியல் தீர்வை தமிழ் பேசும் மக்கள் தொடமாட்டார்கள்.

முன் வைக்கப்படும் அரசியல் தீர்வு, அர்த்தமுள்ளதாக அமையும் பட்சத்தில் மாத்திரமே இதனைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தினரை நாம் கேட்க முடியும்.

உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் கூடியதும், வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களை உள்ளடக்கியதுமான சுயாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம் மட்டுமே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண முடியும் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு வலியுறுத்திக் கூறவேண்டும். சர்வதேச சமூகம் இனியும் மௌனித்துக் கொண்டிருக்கக் கூடாது.' என்று சம்பந்தன் தெரிவித்தார்.

சம்பந்தன் கூறியவற்றை உன்னிப்பாக கேட்டுக் கொண்ட பிரிட்டிஷ் அமைச்சர், அரசியல் போராட்டத்தில் நியாயமிருப்பதைத் தாம் உணர்வதாகவும் அப்போது கூறினார். என்றும் தெரியவருகிறது.

பிரிந்து செல்லும் கட்டத்திற்கு நாடு வந்து விட்டதா என்பது பற்றியோ அல்லது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் பற்றியோ தாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறிய அவர் தென்னிலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதாக அரசு சுமத்தும் குற்றச்சாட்டு பற்றி அப்போது கருத்து வெளியிட்டாதாக தெரியவருகிறது.

தென்னிலங்கையில் இடம் பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவது, விடுதலைப்புலிகளுக்கு இலாபமாக அமையும். அது விடுதலைப்புலிகள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையை அகற்றுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கும். இது தான் உண்மை நிலை என்று பிரிட்டன் அமைச்சர் அப்போது கூறியதாகவும தெரியவருகிறது.

நன்றி தினக்குரல்.

பட்டறிவுப் பகிர்வு!

மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மஹிந்த விசேடமான பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். அவரது வேலைத்திட்டங்களின் பிரகாரம் இலங்கை தற்போது முற்போக்குவாதப் பாதையில்??? பிரவேசித்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படும் விருப்பத்தில் சர்வதேச சமூசங்கள் இருக்கின்றன.

இவ்வாறு மலேன் பிறவுண் பிரபு நேற்று முன் தினம் அலரிமாளிகையில் மஹிந்தவை சந்தித்த வேளையில் புகழாரம் சூட்டினாரென மஹிந்தவின் ஊடக இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளர்.

கடந்த வாரம் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவரலய அரசியல் விவகார அதிகாரி மஹேந்திர ரணவீர பட்டப்பகலில் ஜனக்கூட்டம்; நிறைந்த இடத்தில் அரசின் தகவல் திணைக்களத்துக்கு அண்மித்;த பகுதியில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டா.

அவரைக் கடத்திச் செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை, மலேன் பிறவுண் பிரபு அறிந்திருந்தால் இவ்விதம் கூறியிருப்பாரா எளக் கேட்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நன்றி சுடர் ஒளி

No comments: