Thursday, 17 July 2008

பொலன்னறுவையில் பிள்ளையான் குழு முகாம்களை அமைத்து சிங்கள வாக்குகளைக் கொள்ளையடிக்க முயற்சி – ரணில்


பொலன்னறுவைப் பகுதியில் பிள்ளையான் குழுவினரின் முகாம்களை உருவாக்கி அதன் மூலம் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வருமானம் குறைவடையும் என்ற அச்சத்தினால் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மங்களம் மாஸ்டருடன் இணைந்து வாக்குக் கொள்ளையில் ஈடுபட உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவையில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் குண்டர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி இந்தத் தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிப்பதாகவும், அதன் பின்னர் மீண்டும் பொருட்களின் விலை உயர்வடையும் எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments: