அரசிடம் எதிர்க்கட்சிகள் ஏதாவது கேள்வி எழுப்ப வேண்டுமென்றால் அதற்கு உரிய நேரத்தில் உரிய முறைப்படி கேட்கவேண்டும் சும்மா கண்ட கண்ட நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அரசு பதில் தராது இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
சுகாதார அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக்காக படையினர் இலங்கை வந்துள்ளனரா? இல்லையா? என்று ஐக்கிய தேசிய கட்சி எம்பி ரவி கருணாநாயக்க நேற்ற நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது நிமால் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தியப்படையினரில் ஒரு தொகுதியினர் கொழும்புக்கு வந்துள்ளனர் என்று அமைச்சர் நிமால் சிறீபாலடிசில்வா இதை மறுக்கிறார் என்றும் ரவி கருணாநாயக்க கூறினார்.
இதில் யார் சொல்வது உண்மை இதற்கான அரசின் பதில் என்ன? என்று ரவி கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமால் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப ஒரு முறை இருக்கிறது கண்ட கண்ட நேரத்தில் இ;வ்வாறு கேள்வி எழுப்பினால் எம்மால் பதில் கூற முடியாது
முறையான வழியில் கேள்வி கேட்டால் எதற்கும் பதலளிப்போம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
Saturday, 26 July 2008
கண்ட கண்ட நேரத்தில் அரசிடம் கேள்விகளை எழுப்பக்கூடாது எதையும் முறைப்படி கேட்டால் தானாம் பதில் என்கிறார் -நிமால் சிறீபாலடி சில்வா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment