ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவினர் சிறீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டு பலதரப்பட்ட மக்களையும் மற்றும் பிரமுகர்களையும் சந்தித்தபிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.
அதுதொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தனது கடும்விசனத்தை இன்று காலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் மக்களை சந்தித்தபின் இவ்வாறு கருத்து தெரிவித்தமை பொறுப்பற்ற செயலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐரொப்பியநாடாளுமன்ற குழுவினர் சிறீலங்கா மனிதஉரிமைகள்விடயத்தில் இன்னமும் தீவிர கவனம் செலுத்தவேண்டும் எனவும் காணாமல்போனோரை கண்டுபிடிப்பதற்கு ஆவணசெய்யவேண்டும் எனவும் அனைத்துக்கட்சிக்குழுவில் ததேகூ ஐ இணைக்கவேண்டும் எனவும் பலவிடயங்களை தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment