ஊடகவியலாளர்களைத் தாக்குபவர் களைக் கண்டுபிடிக்க முடியாத அரசால் ஒருபோதும் புலிகளின் தலைவர் பிரபா கரனைக் கண்டுபிடிக்கமுடியாது.
இவ்வாறு கூறுகிறார் ஐ.தே.கட்சி எம்.பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வரு மாறு: யுத்தம் ஒன்று இல்லாவிட்டால் இந்த அரசால் உயிர் வாழ முடியாது.
யுத்தத்தைக் காரணம் காட்டியே நாட்டிலுள்ள அனைத்து விடயங்களும் நிர்வகிக்கப்படுகின்றன. நிர்வாகத்திறன் அறவே இல்லாத இந்த அரசை வாழ வைப்பது இந்த யுத்தம் மாத் திரம்தான்.
விலைவாசி உட்பட அனைத்து விடயங்களுக்கும் காரணம் யுத்தம் என்று தான் அரசு சொல்கிறது. இந்த யுத்தத்தைப் பற்றி யாரும் விமர் சிக்கவும் முடியாது.
பொதுவாக இந்த யுத் தம் பற்றியோ அல்லது பொதுமக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றியோ ஊடகவிய லாளர்கள் வெளிப்படுத்தினால் அவர்கள் தாக்கப்படுகின்றனர்.
ஊடகவியலாளர்களைத் தாக்கியவர் களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவிக்கின்றது. அப்படியாயின் பொலிஸார் இருப்பது எதற்கு? அவர்களிற்கு வழங்கப்படும் சம் பளம் எதற்கு?
இந்த ஊடகவியலாளர்களைத் தாக்கு பவர்களைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத அரசால் எப்படி புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கண்டுபிடிக்க முடியும்?
பிரபாகரன் உயிருடன் இருப்பதனால் தான் மஹிந்தரின் அரசும் வாழ்கிறது.
பிர பாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருக்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனின் படத்திற்கு பூப்போட்டுக் கும்பிடுகிறார் என்றார்.
Tuesday, 8 July 2008
ஊடகவியலாளர்களைத் தாக்கு பவர்களைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத அரசால் எப்படி புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கண்டுபிடிக்க முடியும்?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment