Friday, 25 July 2008

இலங்கையில் சட்டவிரோத மென்பொருள் பாவனையில் வீழ்ச்சி- ஆய்வு

இலங்கையில் கடந்த வருடம் 90 வீதமாகக் காணப்பட்ட கணினி மொன்பொருள்களின் சட்டவிரோதப் பாவனை தற்பொழுது வெகுவாகக் குறைந்திருப்பதாக சைமன்டெக் மென்பொருள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொரும்பாலான தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது தேவைகளுக்கு சட்டரீதியான மென்பொருள்களைப் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாக ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கணினி மொன்பொருள் பயன்பாடு தொடர்பாக ஐ.டி.சி. நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், சட்டவிரோத மொன்பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 6வது இடத்தில் காணப்பட்டது. ஆசிய பிராந்தியத்தில் இரண்டாவது கூடுதலான சட்டவிரோத மொன்பொருகளைப் பயன்படுத்தும் நாடாக இலங்கை காணப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பின்படி 2006ஆம் இலங்கையிலுள்ள பெரும்பாலான கணினிகளில் பதிவுசெய்யப்படும் 10 மொன்பொருள்களின் ஒன்பது மென்பொருள்கள் சட்டரீதியான அனுமதியைப் பெற்றிராத மொன்பொருள்கள் எனக் கண்டறியப்பட்டிருந்தது. சட்டவிரோத மென்பொருள் பயன்பாட்டால் இலங்கையின் உள்ளூர் மென்பொருள் சந்தைக்கு 86 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டதாக ஐ.டி.சி. நிறுவனம் 2006ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டிருந்தது.

எனினும், இந்த நிலைமை தற்பொழுது மாறி வருவதாகத் தெரிவித்திருக்கும் சிலிங்கோ நெட்வேர்க் டெக்நோலஜி நிறுவனத்தின் பணிப்பாளர் சஞ்சே பத்மபெரும, கடந்த 9 மாதகாலமாக மென்பொருள் உள்ளூர் மென்பொருள் சந்தைக்கு ஏற்பட்டிருந்த நட்டம் குறைவடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments: