இலங்கையின் வடபகுதியில் தீவிரமடையும் மோதல் காரணமாக இந்த வருடத்தின் இனி வரும் அரை ஆண்டு காலப்பகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இடம் பெயரலாம் என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் அச்சம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெயரும் மக்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கு 2ஆயிரத்து 93 கோடியே 99 லட்சம் ரூபா தேவை எனவும் அது கூறியுள்ளது.
2008 இல் யாழ். குடாநாட்டிற்குள் 60,000 பேரும் வன்னிக்குள் 80,000 மக்களும் இடம்பெயரலாம் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்புகள் வன்னியிலிருந்தோ அல்லது வவுனியாவுக்குள்ளோ 40 ஆயிரம் பேரும், மன்னாரிற்குள்ளோ அல்லது வன்னியிலிருந்தோ 50 ஆயிரம் பேரும் இடம்பெயரலாம் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்தவை வருமாறு:
வடபகுதியில் மோதல் தீவிரமடைந்துள்ள போதிலும் பெருமளவானவர்கள் உள்நாட்டில் இடம்பெயரவில்லை. இதன் காரணமாக இவ்வருடம் உள்நாட்டில் இடம் பெயரக்கூடியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரம் ஆகக் காணப்படலாம்
மனிதாபிமான உதவிகளில் வடபகுதிக்கு முன்னுரிமை
முன்னர் 3 லட்சம் பேர் இடம்பெயரலாம் என மதிப்பிட்டோம்.எனினும், பாதுகாப்பின்மை மற்றும் மோதல் காரணமாக வடபகுதிக்குள் மக்கள் பல தடவைகள் இடம்பெயரும் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
மோதல் நடைபெறும் வடபகுதிக்கு முன்னுரிமையளித்தே மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
2008 இன் முதல் ஐந்து மாதங்களில் இப்பகுதியில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் எந்நேரத்திலும் இது வேகமாக அதிகரிக்கலாம்.
பாதுகாப்புக் கரிசனைகள், தடைகள் மற்றும் உணவு, எரிபொருள் போன்ற வற்றின் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக மனிதாபிமான நடவடிக்கைகள் கடினமாக மாறியுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் தமது பகுதிகளுக்கு மீளத் திரும்பும் மக்கள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.
அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
கிழக்கில் ஸ்திரபின்மை
கிழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் புதிய ஸ்திரத்தன்மை உருவாவதற்கான அச்சத்தால் தொடர்ந்தும் சந்தேக நிலை காணப்படுகின்றது.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா, சமூகங்கள் மத்தியில் இணக்கப்பாட்டை எற்படுத்த முடியுமா என்பதே முக்கியமானது.
இதேவேளை, பாதுகாப்பின்மை தனிமைப்படுத்தப்படுதல், பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு போன்றன மோதல் நடைபெறும் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மனிதாபிமானத் தேவைகளை உருவாக்கலாம்.
சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பில் ஏற்பட்ட தாக்கத்தை இலங்கையில் உணரமுடிகின்றது. மோதல் நடைபெறும் பகுதிகளில் இது மோசமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது
என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
Friday, 11 July 2008
வடக்கில் இரண்டரை லட்சம் மக்கள் இந்த வருடம் இடம்பெயரும் சாத்தியம் -ஐ.நா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment