பாகிஸ்தான் நாட்டின் படை உயர் மட்டக் குழுவினர் மூவர் நேற்று குடா நாட்டிற்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டனர். குடா நாட்டிற்குச் சென்ற இவர்கள் யாழ் குடாப் படைத் தளபதி சந்திர சிறி,யாழ் நகரத் தளபதி பிரிகேடியர் மார்க் ஆகியோரைச் சந்தித்து குடா நாட்டு படைத்துறை நிலவரங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.
அத்துடன் இவர்கள் முக்கிய படைத்தளங்கள் சிலவற்றிற்கும் சென்றதாகக் கூறப்படுகின்றது. பாகிஸ்தான் நாட்டின் படை உயர் மட்டக் குழுவினரின் விஜயத்தை சிறிலங்கா அரசு இரட்டிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாட்டின் படைஉயர் மட்டக் குழுவினரின் இந்தப் பயணம் குறித்து பல்வேறு தரப்பினராலும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment