Friday, 11 July 2008

துணை இராணுவக் குழுக்ககளின் தலைவர்களான கருணா – டக்ளஸ் விரைவில் சந்திப்பு

துணை இராணுவக் குழுக்ககளின் தலைவர்களான தலைவர் கருணா, டக்ளஸ் தேவானந்த ஆகிய இவரும் விரைவில் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர். பெரும்பாலும் எதிர்வரும் வாரம் இந்தப்பேச்சுக்கள் நடத்தப்படலாம் என துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியின் தலைவரும் ஆயுததாரியுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஈ.பி.டி.பி. மற்றும் ரி.எம்.வி.பி கட்சி அங்கத்துவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் தமது கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பினை அளிக்குமுகமாகவே இந்தப்பேச்சுக்களை கருணாவுடன் நடத்த தாம் தயாராகி வருவதாகவும் ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகளில் பிள்ளையானையும் கலந்துகொள்ளவைக்க எற்பாடுகளையும் அதற்கான அழைப்பினையும் ஈ.பி.டிபி விடுத்துள்ளதாகவும் ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.

எனினும் இது குறித்து கருத்து வெளியிட்ட துணை இராணுவக் குழுவான ரி.எம்.வி.பியின் பேச்சாளர் அஷாட் மௌலானா முதலமைச்சர் பிள்ளையான் தற்போது கிழக்குமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாக தீவிர வேலைகளில் இருப்பதால் இந்தவாரம் அவரால் பேச்சுவார்தைகளில் கலந்துகொள்ளமுடியாது எனவும், எனினும் எதிர்வரும் வாரங்களில் இந்தப் பேச்சுவார்த்தைகளில் அவர் கலந்துகொள்ளக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments: