சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கடமைகளுக்காக இந்திய படையினரின் விஜயம் இலங்கை படையினரை அவமதிக்கும் செயல் என ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாக “லங்கா டிசெண்ட்டிற்கு” தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழிக்க முடியும் என நிரூபித்துக் கொண்டிருக்கும் இலங்கைப் படையினரை தரம் குறைத்து மதிப்பிட இந்திய படையினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டிற்காக செலவிடப்படவுள்ள 2080 லட்சம் ரூபாவில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு குறிப்பிடத்தக்களவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்பிற்காக 1500 இந்திய பாதுகாப்பு படையினர் தற்போது இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மையா என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஆராய்ந்து பராளுமன்றத்தில் தகவல் வெளியிடுவதாக அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment