Thursday, 3 July 2008

கனடாவில் தொழில் வெற்றிடத்தை நிரப்ப இலங்கையர்களை அனுப்ப தீர்மானம்

கனடாவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இளைஞர்களை அந்நாட்டுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பில் கனடா அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. கனடாவில் சுகாதாரம் கட்டத்துறை, பேக்கரி போன்றவற்றுக்கு ஆட்பற்றாக்குறை நிலவுவதால் இலங்கையர்களை அந்த தொழிலுக்காக இணைப்பத்கு அந்நாட்டு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கனடா தொழிலுக்காக விரைவில் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: