Sunday, 6 July 2008

இலங்கைப் பிரஜைகள் தமிழகத்தில் சொத்து வாங்கவேண்டுமென்றால் ரிசேவ் வங்கியின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்


இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளின் பிரஜைகள் தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்குவதென்றால் இந்திய ரிசேர்வ் வங்கியின் அனுமதியைப் பெறவேண்டும் எனத் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

இலங்கைக்கு அப்பால் பாகிஸ்தான் , பங்களாதேஸ் , ஆப்கானிஸ்தான் , சீனா , ஈரான் , நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் இந்த வரையறைக்குள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்கத் தமிழக அரசாங்கம் தடை விதித்திருப்பதாக வெளியான ஊடகச் செய்திகளை அடுத்தே இந்த விளக்கத்தைத் தமிழக அரசாங்கம் வெளியிடப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைகளுக்கு கீழேயே அண்மைக் காலத்தில் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் சொத்து விபரங்களும் தமிழக அதிகாரிகளினால் திரட்டப்பட்டதாகத் தமிழக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments: