Friday, 11 July 2008

கல்முனை காவல்நிலைய பொறுப்பதிகாரி தற்கொலை

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை காவல் நிலைய பொறுப்பதிகாரி இன்று காலை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

கல்முனை காவல்நிலைய பொறுப்பதிகாரியான எல்.எம்.சி. சந்திரதிலகவே இன்று அதிகாலை 5:45 மணியளவில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

தன்னிடமிருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தியே அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிவித்த கல்முனை காவல்நிலைய காவல்துறையினர், கல்முனை காவல்நிலைய பகுதியிலேயே நேற்றைய நாள் படுக்கை விரிப்புகளை விற்பனை செய்யச் சென்ற சிங்களவர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தையடுத்து இவருக்கு உடனடியாக தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டது.

இன்று காலை முதல் இவரை அம்பாறை காவல் நிலையத்திற்கு மாற்றும் உத்தரவை பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருந்தது.

இதனால் விரக்கியுற்றிருந்த இவர் இன்று காலை தனது வீட்டில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments: