Friday, 25 July 2008

இத்தாலியின் இலங்கை தூதரக அதிகாரிகள் இருவர் புலிகளுக்கு உதவி?

இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் விடுதலைப்புலிகளுக்கு உதவி வருகிறார்கள் என கிடைக்கபெற்றுள்ள தகவல்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இத்தாலியின் பெலமோர் பிரதேசத்தில் 50 போலி கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குலதேவன் என்ற தமிழர், அந்த பிரதேச காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்தே தூதரகத்தின் இரண்டு அதிகாரிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குலதேவன் என்பவர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என தகவல்கள் கிடைத்துள்ள போதிலும் விசாரணைகள் முடியும் வரை அது குறித்து எதனை வெளியிட முடியாது என அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


குற்றசுமத்தப்பட்டுள்ள இந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர் கனடாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கான பிரதி தூதுவராக நியமிக்கப்படவிருந்ததாகவும் தற்போது, அந்த நியமனம் தொடர்பாக மீள்பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: