கிழக்கின் பல பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களை மீள அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு மீளக் குடியமர்த்தப்படாமலுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் வடக்குää கிழக்கின் தற்போதைய நிலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைச் சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, கிழக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நூற்றாண்டு காலமாக அப்பகுதியில் வாழ்பவர்கள்.
அது அவர்களின் சொந்த இடங்களாகும். ஈச்சிலம்பற்று, மூதூர் கிழக்கு,பள்ளிக்குடியிருப்பு, பாட்டாளிபுரம், கட்டை பறிச்சான், நவரத்னபுரம், சேனையூர் போன்ற பகுதிகளில் முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.
இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில் கிழக்கில் 90 வீதத்தினர் தமிழ் பேசும் மக்களாகவே இருந்தனர். இன்றைய நிலை தேசிய முரண்பாட்டை மேலும் அதிகரிப்பதாவே உள்ளது.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவர் வடக்கு,கிழக்கு இணைப்பையே விரும்புகின்றார். அண்மையில் இலங்கை வந்திருந்த தூதுக் குழுவும் இதனையே வலியுறுத்தியிருந்தது.
No comments:
Post a Comment