Sunday, 6 July 2008

சந்திரிக்காவுக்கு எதிரான சிவில் உரிமைகளை பறிப்பதற்கான வலுவான ஆதாரம் சேகரிப்பு!!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சிவில் உரிமைகளை பறிப்பதற்கான வலுவான ஆதாரங்களை அரசாங்கம் தயாரித்து வருகிறது.

சந்திரிகா, தமது ஆட்சியின் போது அரச காணியை, தமது நெருங்கிய நண்பரான ரொனி பீரிஸ் என்பவருக்கு ‘கொல்ப்’ மைதானம் அமைக்க வழங்கியமை தொடர்பிலேயே இந்த வலுவான ஆதாரம் அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது.

இதேவேளை இரண்டு அரசாங்கப்பணியாளர்கள் குறித்த நிலத்தை சந்திரிகா, ரொனி பீரிஸூக்கு வழங்கியமை அடிப்படை உரிமை மீறல் என கூறி தாக்கல் செய்துள்ள மனுவும் உயர்நீதிமன்றத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளது.

இந்தநிலையில் அரசாங்கம் இந்த தருணத்தை பயன்படுத்தி, ரணில் விக்கிரமசிங்க, மங்கல சமரவீர மற்றும் சந்திரிகா எதிர்பார்க்கப்படும் கூட்டமைப்பை உடைத்து விடலாம் என எண்ணத்தை கொண்டுள்ளது.

1977 ஆம் ஆண்டும் சந்திரிகாவின் தாயாரான முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் பிரதம மந்திரி அலுவலகத்தை தமது தனிப்பட்ட நலன்களுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக சிவில் உரிமையை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: