பஸ்ஸில் பணம் கொடுக்காமல் ஓசி பயணம் செய்த இளைஞனிடம் பணத்தை நடத்துநர் கேட்டபோது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் வேப்பொத்துவ என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சமன் கொடித்துவக்கு (29 வயது) என்ற இளம் பஸ் நடத்துநரே கொலை செய்யப்பட்டவராவார். மாத்தறையில் இருந்து வலஸ்முல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸில் ஏறிய இந்த நபர் ரிக்கெட் பெறாது இடைவழியில் இறங்க முயன்றார். அதன்போது நடத்துநர் அவரிடம் ஏன் ரிக்கற் எடுக்கவில்லை என்று பணத்தைக் கேட்டபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு ஏனைய பயணிகளால் விலக்குப் பிடித்து சமாதானப்படுத்தப்பட்டனர். நடத்துநர் மாலை வேலை முடிந்து வீடு செல்லும்போது வேப்பொத்துவ என்ற இடத்தில் அவரை மறித்த சந்தேக நபர் போத்தலை உடைத்து நடத்துநரை பல தடவைகள் குத்தியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த நடத்துநர் ஆபத்தான நிலையில் கரவலபிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார். இது குறித்து ஹக்மன பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன் விசாரணையும் நடத்திவருகின்றனர்.
Friday, 11 July 2008
பஸ்ஸில் ரிக்கற் எடுக்காமல் பயணம் செய்தவரிடம் நியாயம் கேட்ட நடத்துநர் குத்திக்கொலை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment