Saturday, 12 July 2008

கதிர்காமம் சிவபூமி அன்னதானக் குழுத் தமிழ் உறுப்பினர் கைது.


கதிர்காம உற்சவம் ஆரம்பமாகி இன்று 10 வது நாள் திருவிழா நடைபெறுகிறது. அங்கு அன்னதானம் தினமும் இடம்பெற்றுவருகிறது. அன்னதானக்குழு உறுப்பினரொருவர் (வவுனியா) சந்தேகத்தின் பேரில் கதிர்காமம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் முகாமையாளர் ஞானசுந்தரம் தலையிட்டு நீதிமன்றம் சென்று 2 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

சிவபூமி அன்னதான தொண்டர் சபையினர் 7 வது வருடமாக அன்னதானத்தை தினமும் நடாத்தி வருகின்றனர்.

கதிர்காமம் இந்து யாத்திரிகர் விடுதியில் தினமும் 6000 அடியார்களுக்கு அன்னதானத்தை வழங்குவதாகச் சிவபூமி அன்னதான தொண்டர் சபையின் முகாமையாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.

பொருட்களின் விலை இரட்டிப்பான சூழலிலும் அன்னதானத்தை வழங்குவதாகச் சிவபூமி அன்னதான தொண்டர் சபையின் முகாமையாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.

இம்முறை அன்னதானத்தில் பங்குபற்றும் பக்தர்களில் 80 வீதமான மக்கள் பெரும்பான்மையினத்தவராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: