Wednesday, 9 July 2008

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பி.கே.கே. அமைப்பு மூலம் ஆயுதங்கள் - துருக்கிய இராணுவத் தளபதி

பி.கே.கே கொன்கிறா-ஜெல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் அளித்துவருவதாக துருக்கிய இராணுவத்தளபதி ஜெனரல். ஜஷார் பஜூஹானின் தெரிவித்துள்ளார்.

பி.கே.கே அமைப்பு துருக்கி ஈரான் மற்றும் ஈராக் பிரதேசங்களுக்கிடையில் தமக்கு தனியான ஒரு நாடு வேண்டும் எனக்கோரி போராடிவரும் அமைப்பாகும். எனினும் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் என்ற பட்டியலில் இந்த அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் 80 வீதமான போதைப்பொருட்களை ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு பி.கே.கே அமைப்பே வழங்கிவருவதாகவும், இந்த அமைப்பு பிரதேசத்திற்கு மட்டுமின்றி முழு உலகத்திற்கும் அச்சுறத்தலான அமைப்பாகவும் உள்ளதாகவும்,

அதேவேளை சிறி லங்காவில் தனிநாடு கோரி போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புக்களுக்கு இந்த பி.கே.கே அமைப்பு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கிவருவதாகவும் ஜெனரல். ஜஷார் பஜூஹானின் தெரிவித்துள்ளார்.

No comments: