Wednesday, 9 July 2008

சார்க் மாநாட்டுப் பாதுகாப்புக்காக குடாநாட்டில் பயணக் கட்டுப்பாடு

யாழ்.குடாநாட்டிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வோருக்கு பயண அனுமதி வழங்குவதை படையினர் மட்டுப்படுத்தியுள்ளனர்.

கொழும்பில் நடைபெறவுள்ள "சார்க்' மாநாட்டின் பாதுகாப்பை முன்னிட்டே குடாநாட்டிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக குடாநாட்டில் சிவில் பாதுகாப்பு அலுவலங்களுக்கு பயண அனுமதி பெறச் செல்வோருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயண அனுமதி வழங்கப்படுகின்றது.

குறிப்பாக மருத்துவ சிகிச்சை, நேர்முகப் பரீட்சை, அரச பணிகள் மற்றும் மரணச் சடங்குக்குச் செல்வோருக்கே முன்னுரிமை அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட பயண அனுமதி வழங்கப்படுகின்றது.

இது தொடர்பாக கிராமசேவையாளர்கள் மற்றும் பிரதேச செயலர்களுக்கும் படைத்தரப்பு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: