Wednesday, 9 July 2008

இலங்கையின் படையினர் மீது சர்வதேச அரங்கில் பாதகமான எண்ணக்கரு!!!

சர்வதேச ரீதியில் இலங்கையின் நன்மதிப்புக்கு குந்தகம் ஏற்படக் கூடிய செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பி. கட்சி நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளினால் இலங்கை படைத்தரப்பினர் மீது சர்வதேச அரங்கில் பாதகமான எண்ணக்கரு உருவாகியுள்ளதென ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் இழப்பதற்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த நியாயமான வேண்டுகோளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் இந்த பாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

No comments: