Friday, 25 July 2008

அரசாங்கத்தின் அனுமதியின்றி கடத்தல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பே இல்லை

அரசாங்கத்தின் அனுசரணையின்றி கடத்தல்கள் மற்றும் அது தொடர்பான படுகொலைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.

இதனை ஈ.பி.டி.பி. அலுவலக வளாகத்தில் தோண்டியெடுக்கப்பட்ட சடலம் உறுதி செய்திருப்பதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெ?வித்தார்.

இது தொடர்பில் விஜித்த ஹேரத் எம்.பி.

மேலும் கூறியதாவது: இலங்கையைப் பொறுத்த வரையில் ஜனநாயகம் மரணித்துவிட்டது என்று கூறுவதைவிட கொலை செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.

சகல விதத்திலும் மக்கள் துன்பத்தை மாத்திரமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கடத்தல் என்ற பிடிக்குள் பெரும்பாலும் தமிழ் மக்களே சிக்கித் தவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாக அரசாங்கம் கூறினாலும் உண்மையில் ஜனநாயகம் என்பது அங்கு கேள்விக்குறியாகவே மாறியுள்ளது.

இதற்கு அரசாங்கமே அனுமதி வழங்கியிருப்பது பயங்கரமான குற்றமாகும்.

நாடு ?ழுவதும் வெள்ளை வான் குறித்த பயம் தமிழ் மக்களைத் தொற்றிக் கொண்டிருக்கின்றது.

இந்த வெள்ளை வான் கலாசாரம் நேரடியாக தமிழ் மக்களையே பாதித்து வருகின்றமைக்கு அரசே பொறுப்பெடுக்க வேண்டும்.

ஏனெனில், அரசுக்கு ஆதரவளிக்கும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலக வளாகத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளமையும், அந்தச் சடலம் ஒரு தமிழருடையது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பில் கிடைத்திருக்கும் தடயங்கள் மற்றும் சாட்சிகள், குற்றவாளிகள் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்தவேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

இதனை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாது. அத்துடன், பொலிஸாரும் நேர்மையுடன் செயற்படவேண்டும்.

No comments: