வெள்ளவத்தை பகுதியில் சிங்கள வீட்டில் பணிபுரிந்த தமிழ் யுவதி ஒருவர், அவ்வீட்டில் வசிக்கும் சிங்கள இளைஞர் ஒருவரது அடையாள அட்டையை திருடிக் கொண்டு அவ்வீட்டிலிருந்து தப்பிச் சென்றவர், அநுராதபுரம் திறப்பனே பகுதி பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரால் திருடப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசியொன்றும் தங்கமோதிரமொன்றும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த சிங்கள யுவதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி தமிழ் யுவதி பதுளையைச் சேர்ந்தவரெனவும் குறிப்பிட்ட காலங்களாக வெள்ளவத்தையில் சிங்கள வீடொன்றில் பணிபுரிந்து பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் இப்பெண்ணுக்கு புலிகளுடன் தொடர்புகள் இருப்பதாலேயே ஏதாவது நாசகார அல்லது மோசடிகளில் ஈடுபட இவ்வாறு சிங்களவரது அடையாள அட்டையை திருடிக்கொண்டு வந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. (திவயின 25.07.2008)
Friday, 25 July 2008
சிங்கள இளைஞரின் அடையாள அட்டையை களவாடி தப்பிச் சென்ற தமிழ் யுவதி கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment