Friday, 25 July 2008

பிரித்தானிய பிரஜைகள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதற்கான சட்ட விதிகள் இறுக்கம்

பிரித்தானிய பிரஜாவுவுமை பெற்றவர்கள் வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்வதற்கான சட்டவிதிகள் மென்மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.

பலவந்த திருமணங்களைத் தடுப்பதற்காகவே இந்நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பிரகாரம் திருமண வயதெல்லையானது 18 வயதிலிருந்து 21 வயதாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் பி?த்தானியப் பிரஜையை திருமணம் செய்யவுள்ள வெளிநாட்டு வாழ்க்கைக் துணை, இங்கிலாந்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு ஆங்கிலமொழியைக் கற்றுக் கொள்வதாக உடன்படிக்கை ஒன்றில் கைச் சாத்திடுவதும் அவசியமாக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வெளிநாடுகளில் திருமணம் செய்வதற்காக செல்லும் பிரித்தானிய பிரஜைகள் இங்கிலாந்தை விட்டுப் புறப்படும் முன்பு தாம் செல்லும் நோக்கத்தை பதிவு செய்வதும் அவசியமாகும்.

பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற பாகிஸ்தானிய மற்றும் இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள்,

தமது பெற்றோரின் நாட்டுக்கு விஜயம் செய்கையில் பலவந்தமாக திருமண பந்தத்தில் ஈடுபடுத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற குற்றச்சாட்டுகளையடு த்தே இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: