Thursday, 24 July 2008

அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் வாகன விபத்தில் கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர் பலி

அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் பாலத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பிலுவிலைச்சேர்ந்த 55 வயதுடைய கூட்டுறவு சங்க கிளை முகாமையாளரான ஏ.தேவேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி எம்.ஜி.ரஷீட் முகம்மட் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றிலிருந்து தம்பிலுவிலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிலும் தம்பிலுவிலிருந்து

அக்கரைப்பற்றை நோக்கி வந்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது இரு மோட்டார் சைக்கிளையும் செலுத்தி வந்த இருவரும் படுகாயமடைந்து அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் ஒருவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: