உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக டென்மார்க் திகழ்வதாக அமெரிக்க அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட ஆய்வொன்று இந்த வாரம் தெரிவித்துள்ளது.
அரசியல் ஸ்திரமற்ற நிலையின் காரணமாக சிம்பாப்வே, இந்தத் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.
97 நாடுகள் மத்தியில் அமெரிக்கா நடாத்திய இந்த ஆய்வில் அமெரிக்கா 16 வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
டென்மார்க் மகிழ்ச்சிகரமான நாடாக விளங்குவதுடன் சிறந்த பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் சமூக சகிப்புத்தன்மை ஆகிய அம்சங்கள் அங்கு காணப்படுவதாக அமெரிக்க தேசிய விஞ்ஞான நிலையம் தனது ஆய்வில் மேலும் கூறியுள்ளது.
இந்த ஆய்வில் முதல் 10 மகிழ்ச்சிகரமான நாடுகளாக டென்மார்க், பியுற்றோ றிக்கோ, கொலம்பியா, ஐஸ்லாந்து, வட அயர்லாந்து, அயர்லாந்து, சுவிஸ்லாந்து, நெதர்லாந்து, கனடா மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment