Thursday, 10 July 2008

தென்மராட்சியில் மர்ம உலங்கு வானூர்தி.

யாழ் தென்மராட்சியில் நேற்றிரவு பறந்த மர்ம உலங்குவானூர்தி தொடர்பில், சிறீலங்கா படையினர் மத்தியில் பாரிய குழுப்பம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறாக தாழ்வாக மிகவும் பலத்த இரைச்சலுடன் இந்த உலங்கு வானூர்தி பற்றப்பில் ஈடுபட்டமையே இந்த குழப்பதற்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு 10:30 முதல் 11:00 மணிவரை அவதானிக்கப்பட்ட இந்த உலங்குவானூர்தி பறப்பில் ஈடுபட்டபோது, கரையோரங்கள், மற்றும் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் முன்னரங்க நிலைகளை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர்.

கடந்த 4ஆம் நாளும் இதேபோன்ற வானூர்தி சத்தம் தென்மராட்சி கரையோர மக்களால் செவிமடுக்கப்பட்டதுடன், ஏக காலத்தில் படையினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டிருந்ததையும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments: