Thursday, 10 July 2008

இன்று காலை முதல் வவுனியா மன்னார் மாவட்டங்களில் கையடக்கத் தொலைபேசிகள் இயங்கவில்லை!

வவுனியா மன்னார் மாவட்டங்களில் இன்று காலை முதல் கையடக்கத் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாக தொலைபேசி பாவனையாளர்கள் தெரிவித்தனர்.

அதிகாலை சுமார் 7.30 மணிவரையில் கையடக்கத் தொலைபேசிகள் செயற்பட்டதாகவும், அதன் பின்னர் செயற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

டயலொக், மொபிடெல் உட்பட்ட கைத்தொலைபேசிகளில் தொலைபேசி சேவைக்கான சமிக்ஞைகள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எனன காரணத்திற்காக இவை நிறுத்தப்பட்டிருந்தன என்பது தெரிவிக்கப்படவில்லை.

No comments: