Wednesday, 16 July 2008

வடபோர் முனையில் புதிய ரக ஆளில்லா வேவு விமானம் நோட்டம்

சிறீலங்கா அரசாங்கம் இஸ்ரேலிடமிருந்து புதிய ரக ஆளில்லா வேவு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளது. புதிய தொழிநுட்பங்களுடன் தாயாரிக்கப்பட்ட இவ் ஆளில்லா வேவு விமானம் இரவு பகல் என சமநேரத்தில் துல்லியமாக இலக்குகளை இனங்காணக்கூடியது.

கொள்வனவு செய்யப்பட்ட வேவு விமானம் தற்பொழுது வடபோர் முனையில் சிறீலங்கா வான்படையினரால் பறப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிளாலி, முகமாலை, நாகர்கோவில் ஆகிய முன்னரங்க நிலைகளில் இரவு பகலாக வேவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நீண்ட நேரம் பறப்பில் ஈடுபடும் திறணைக் கொண்ட இந்த வேவு விமானம் அதிகாலை 3 மணி வரை பறப்பில் ஈடுபடுகின்றது.

வடபோர் முனையில் விடுதலைப் புலிகளின் ஆளணி மற்றும் தளபாட முன்னகர்வுகளைக் கண்காணிகும் நோக்கியேலேயே இந்த வேவு விமானம் பயன்பாட்டில் உள்ளதாகச் சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: