தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களில் சிலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆவணங்களைப் பெற்று தமிழகத்தில் சொந்து வாங்குவதாக அரசின் கவனத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இவற்றைப் பரிசீலித்து இந்தியக் குடிமக்களாக இல்லாதவர்கள் நிலம் மற்றும் வீடு வாங்குவதை மாவட்ட ஆட்சியர்களும் காவல் துறையினரும் தடுக்க வேண்டும். அகதிகள் என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பு ஈழத்தமிழர் மீது அவர் கொண்டிருக்கும் அளவற்ற வெறுப்பின் அடையாளமாகும். சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் விரட்டியடிக்கப்பட்டு தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிற ஈழத்தமிழர்களில் பலர் அரசு அமைத்திருக்கிற அகதி முகாம்களில் போதுமான உணவின்றியும் சுகாதாரம், கல்வி வசதிகள் இல்லாமலும் வாடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.
அகதிகள் முகாம்களில் உள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்துவற்கான வழி எதையும் தமிழக இந்திய அரசுகள் செய்யவில்லை. அகதிகளின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் முன்வந்தபோது இந்திய அரசு அவர்களின் உதவியை ஏற்க மறுத்துவிட்டது.
அரசு உதவியை எதிர்பாராமல் தங்களுடைய சொந்த முயற்சியின் பேரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் இன்னொரு வகையினர்.
தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் மானத்துடன் வாழவும் அவர்கள் தமிழ்நாட்டில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் சிலர் வீடுகளை வாங்கியும் குடியிருந்து வருகிறார்கள்.
இலங்கையில் போர் ஓய்ந்து அமைதியான சூழ்நிலை திரும்பிய பிறகு இவர்கள் யாரும் தமிழ்நாட்டில் தங்கியிருக்கப் போவதில்லை. தங்கள் நாட்டிற்கு நிச்சயமாகத் திரும்பிப் போய்விடுவார்கள். நமது நிழலில் அண்டியிருக்க வந்த நமது சகோதரர்களை விரட்டியடிப்பதற்கு கருணாநிதி முற்படுகிறார்.
தமிழகத்தைச் சுரண்டவந்த மார்வாடியும், குஜராத்தியும், மலையாளியும் பிறகும் தமிழகத்தில் நிலம் வீடுகள் வாங்கிக் குவிக்கிறார்கள்.
பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழை விவசாயிகளிடமிருந்து பறித்துத் தர கருணாநிதி கொஞ்சமும் தயங்கவில்லை.
அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் கொள்ளையடித்துத் திரட்டியுள்ள பணத்தில் தமிழகமெங்கும் நிலம் வீடு வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
Wednesday, 2 July 2008
ஈழத் தமிழர் மீதான வெறுப்பின் அடையாளமே கருணாநிதியின் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
karuna(nidhi) is no more world tamil leader-he himself downgraded to a level of local,selfish politician!
Karunanidhi cannot win elections hereafter!
Post a Comment